Social Icons

Friday, July 6, 2012

KEYBOARD LOCKER...அவசியம் பயன்படும்



கீழே இருக்கும் லிங்க் கிளிக் செய்து தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். உங்கள் கணினிக்கு ஜிப் வடிவில் SCRIPT(AUTOHOTKEY) தரவிறக்கம் ஆகிவிடும். பிறகு அதனை திறந்து (UNZIP) கீழ தந்திருக்கும் ஸ்கிரிப்ட்டை ரன் செய்தால் அதாவது டபுள் கிளிக் செய்தால் உங்கள் கணினி டாஸ்க்பாரில் சின்ன ஐகான் வந்துவிடும். படத்தில் பார்க்கவும்.


Instell செய்து  முடிந்ததும் 
 இனிமேல் உங்களுக்கு  தேவையான சமயங்களில் கீ போர்டில் CONTROL+ALT+L கிளிக் செய்தால் உங்கள் கீ போர்ட் லாக் ஆகிவிடும்.திரும்பவும் UNLOCK செய்ய கீ போர்டில் "UNLOCK " என்று டைப் செய்தால் போதும்.



நமக்கு தேவையான நேரங்களில்  SCRIPT ரன் செய்து பயன்படுத்தி கொள்ளலாம்.எப்பொழுதும் இந்த வசதி STARTUP MENUவில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைப்பவர்கள் கீழே இருப்பதை போல் செய்யவும்.


(*)  உங்கள் கணினி திரையில் எதாவது ஒரு இடத்தில் ரைட் கிளிக் செய்து          NEW  -     SHORTCUT
(*) தரவிறக்கம் செய்து வைத்துள்ள இடம்.

(*)  START - PROGRAMS - STARTUP - KEYBOARD LOCKER  வந்துவிடும் .

             மிக எளிதாக செய்யலாம் தேவையானவர்கள் பயன் படுத்தி பாருங்கள்.


** - கீ போர்டுக்கு தமிழில் விசைப்பலகை.வரும் பதிவுகளில் விசைப்பலகை என்று பயன்படுத்தப்படும்.

Thursday, July 5, 2012

ஸ்கைப் உரையாடலின் ​போது குரலை மாற்றுவதற்​கு




உலகில் அதிகளவான பயனர்களால் பயன்படுத்தப்படும் முன்னணி வீடியோ தொடர்பாடல் மென்பொருளான ஸ்கைப்பில் தொடர்பு கொள்ளும் போது குரலை மாற்றியமைப்பதற்கு Skype Voice Changer எனும் மென்பொருள் துணைபுரிகின்றது.
இம்மென்பொருளின் உதவியுடன் ஆண்கள், பெண்களின் விதம் விதமான குரலை மாற்றக் கூடியதாகக் காணப்படுவதுடன், உரையாடலின் போது பின்னணி இசையினையும் செயற்படுத்த முடியும்.

தவிர குறித்த பின்னணி இசையின் பிச்சினையும் மாற்றியமைக்க முடியும். இவற்றுடன் குறித்த உரையாடலை பதிவு செய்து கொள்ளவும் இம்மென்பொருள் உதவிபுரிகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தரவிறக்க சுட்டி

Wednesday, June 6, 2012

Adobe AIR 3 மென்பொருளை​த் தரவிறக்கம் செய்வதற்கு

Adobe AIR 3 என்பது கணணியின் வன்பொருட் பாகங்களை ஒருங்கிணைத்து இயங்கச் செய்தும் இயங்கு முறைமை(cross-operating system) போன்றது.
இம் மென்பொருளின் உதவியுடன் இணையத்தளங்களுடன் தொடர்பான புதிய வினைத்திறனான மென்பொருட்களை உருவாக்கி பயன்படுத்திக் கொள்ள முடியும்.


அதாவது network, user connectivity, rich media content, ease of development, and broad reach போன்றவற்றை மிகவும் எளிமையான முறையில் உருவாக்கிக் கொள்ள முடியும். இதற்கென இலகுவான பயனர் இடைமுகத்தைக் கொண்டு காணப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் இம்மென்பொருளானது விண்டோஸ், லினக்ஸ், அப்பிளின் மக் போன்ற இயங்குதளங்களிலும் செயற்படக்கூடியதாக காணப்படுகின்றது.

தரவிறக்க சுட்டி

Monday, April 30, 2012

கணணியில் கோப்புகளை முழுவதுமாக நீக்குவதற்கு



கணணியில் இருக்கும் தனிப்பட்ட கோப்புக்களை மற்றவர்களிடமிருந்து பாதுகாப்பதற்காக பல நடைமுறைகளை பயன்படுத்துவீர்கள். 

எனினும் தனிப்பட்ட கோப்புக்களின் பயன்பாடு முடிந்தவுடன் அவற்றை கணணியிலிருந்து ரீக்கவர் செய்ய முடியாதவாறு முழுவதுமாக நீக்கிவிட விரும்புவீர்கள். 

FileWing என்ற மென்பொருள் இதையே செய்கின்றது. இந்த மென்பொருள் மூலம் நீங்கள் ஏற்கனவே அழித்துவிட்ட கோப்புக்களை ரீகவர் செய்வதுடன் அவற்றை முழுவதுமாக அழித்தும் விடலாம். 

FileWing ஐ முதல் முறை பயன்படுத்த தொடங்கும் போது unlock code ஐ பெற்றுக்கொள்வதற்காக மின்னஞ்சல் முகவரி தரவேண்டும். 

பின்னர் டிஸ்க்கை ஸ்கான் செய்ய அல்லது கோப்புக்களை, டிரைவ்களை அழிப்பதற்கென இரு ஆப்ஸன்கள் காட்டும். 

முற்றுமுழுதாக கணணியில் கோப்புக்களை நீக்கிவிட Quick Deletion இலிருந்து shredding method ஐ தெரிவு செய்ய வேண்டும். 

GOST, DoD (E), DOD(ECE), Bruce Schneider, VSITR மற்றும் Peter Gutmann போன்ற முறைகளில் கோப்புக்களை நீக்கலாம். தெரிவு செய்த பின்னர் Delete Files ஐ அழுத்துங்கள். 

கணணியிலிருந்து வழமையான முறையில் அழிக்கப்பட்டும் கோப்புக்களை ரீகவர் செய்யவதற்கு ஸ்கான் டிஸ்க்ட் ஆப்ஸனை தந்து பின்னர் ரீகவர் செய்யப்பட வேண்டிய இடத்தையும் தெரிவு செய்யுங்கள். 

தரவிறக்க சுட்டி

Sunday, April 29, 2012


இன்று அனைவராலும் Pen Drive பயன்படுத்தப்பட்டு வருகிறது, அதில் நாம் பல வகையான பைல்களையும் கோப்புகளையும் வைத்திருப்போம்.
அதில் சில அலுவலக ரகசிய பைல்களாகவோ அல்லது நமது தனிப்பட்ட பைல்களாகவோ இருக்கும். நமது பென் ரைவினை நண்பர்களுக்கு அவசர பயன்பாட்டுக்கு கொடுக்கும் போது அதில் உள்ள நமது ரகசிய கோப்புகளை பார்ப்பதற்காள வாய்ப்புக்கள் ஏற்படுகின்றது.

இத்தகைய இக்கட்டான சூழ்நிலையை தடுக்க நமது ரகசிய ஆவணங்களை மற்றையவா்கள் பார்க்க முடியாதவாறு பென் ரைவில் மறைத்து வைத்தல் வேண்டும். இதற்கு 1.69MB அளவையே கொண்டWinMend Folder Hidden எனும் ஒரு சிறிய மென்பொருள் உங்களுக்கு உதவிடும்.

இந்தமென்பொருளை பயன்படுத்தி உங்கள் Pen Drive ல் மறைக்கப்பட்ட கோப்புகளை வேறு எந்தக் கணனியிலும் திறக்க முடியாது.

இந்த மென்பொருளின் மூலம் உங்கள் பென் ரைவில் மாத்திரமின்றி உங்கள் கணணியில் உள்ள கோப்புகளையும் மறைக்க பயன்படுத்தலாம்

WinMend Folder Hiddenமென்பொருளின் தரவிறக்க சுட்டி இங்கு அழுத்தவும்

உங்கள் கணணியில் WinMend Folder Hidden  மென்பொருளினை நிறுவியபின் முதலில் திறக்கும் போது கீழே உள்ளது போன்று ஒரு விண்டோ திறக்கும் அதில் உங்கள் கடவுச்சொல்லை கொடுத்து OK ஐ அழுத்தவும்.
பின் கீழ் உள்ளதை போன்று விண்டோ திறக்கும் இதில் Hide Folder அல்லது Hide File(s)  என்பதனை அழுத்தி உங்கள் ஆவணங்களை தேர்வு செய்து விட்டு விண்டோவை மூடி விடவும்.

இப்போது நீங்கள் தோ்வு செய்த ஆவணங்கள் அல்லது கோப்புகள் மறைக்கப்பட்டு காணப்படும். இப்போது உங்கள் பென் ரைவில் நீங்கள் மறைத்த ஆவணம் உங்கள் கணணியில் மாத்திரமின்றி வேறு கணனியிலும் காட்டாமல் மறைக்கப்பட்டிருக்கும்.

மறைக்கப்பட்ட கோப்புகளை மீண்டும் செயற்படுத்த WinMend Folder Hidden மென்பொருளை திறக்கவும் திறக்கும் போது உங்கள் கடவுச்சொல்லை உள்ளிடும் படி கேட்டும்

உங்கள் கடவுச்சொல்லை உள்ளிட்ட பின் கிடைக்கும் திரையில் Unhide என்பதை அழுத்தி பார்வையிடலாம்.

மேலதிக தகவலுக்கு WinMend Folder Hidden மென்பொருளின் உத்தியோக வலைத்தளத்திற்கு இங்குஅழுத்துக

பெரிய அளவுள்ள பைல்களை வேகமான Copy செய்ய..

பெரிய அளவுள்ள சில பைல்களையோ அல்லது கோப்புகளையோ கொப்பி செய்திடுகையில் சில வேளைகளில் விண்டோஸ் இயங்க மறுக்கும்.
இதுவே அதிகளவுள்ள பைல்களையுடைய கோப்புகளை கொப்பி செய்திடுகையில் இப்பிரச்சினை ஏற்படும் போது எந்தந்த பைல்கள் கொப்பியாகியுள்ளது, எந்த பைல் கொப்பி ஆகவில்லை என்று கண்டுபிடிப்பது மிகச்சிரமமாகும். இத்தகைய பிரச்சினைகளின் போது என்ன செய்வது என்று திண்டாடுவோம்

இதனை தவிர்த்து மிக வேகமாகவும் விரைவாகவும் பெரிய அளவுள்ள கோப்புகளை காப்பி செய்ய உதவும் ஒரு மென்பொருளே Tera Copy எனும் ஒரு இலவச மென்பொருளாகும்.

இந்த மென்பொருளை கணணியில் நிறுவியபின் நீங்கள் கொப்பி செய்யும் போதல்லாம் தானாகவே இயங்கி வேகமாக கொப்பி செய்யும்.
பெரிய அளவுள்ள பைல்களை  கொப்பி செய்யும் போது அதனை Pause, Resume செய்யும் வசதியும் இதில் உண்டு.
அதுமாத்திரமின்றி பெரிய அளவுள்ள கோப்புகளை காப்பி செய்யும் போது ஏதாவது பைல் ஒன்றை கொப்பி செய்வதில் பிரச்சினை ஏற்படுமாயின் அந்த பைலை விட்டுவிட்டு ஏனைய பைல்களை காப்பி செய்யும் அனைத்து பைல்களையும் கொப்பி செய்து முடித்ததும் பிழையான பைலின் விபரத்தை காட்டும் அதனை சரி செய்து விரைவாக அதனையும் காப்பி செய்யலாம்...

Tera Copy மென்பொருளை தரவிறக்க......
மேலும் விபரமறிய Tera copyயின் உத்தியோக வலைத்தளச்சுட்டிக்கு இங்கு அழுத்துக.



விருப்பம் போல் ஒவ்வொரு போல்டருக்குமான வடிவத்தை மாற்ற


நமது விருப்பம் போல் போல்டர் ஒன்றின் நிறத்தையும் வடிவத்தையும் மாற்ற உதவும் ஒரு சிறிய மென்பொருள் பற்றிய ஒரு பதிவு..

நமது கணணியில் எத்தனையோ போல்டர்களை உருவாக்கி வைத்திருப்போம். இந்த போல்டருக்கு நம் விருப்பம் போல் நிறத்தையோ அல்லது வடிவத்தையோ மாற்றி கொள்ள  முடியும்.

இவ்வாறு போல்டருக்கான Iconஐ மாற்றிக் கொள்ள உதவும் ஒரு சிறிய மென்பொருளே Foldericoஎனும் இலவச மென்பொருளாகும்(தறவிறக்க சுட்டி கீழே) இம்மென்பொருளினை உங்கள் கணணியில் நிறுவிக் கொள்வதன் மூலம் உங்கள் விருப்பப்படி நீங்கள் விருப்பிய வடிவத்தை ஒவ்வொரு போல்டருக்கு இடமுடியும் நிறத்தையும் மாற்றிக் கொள்ள முடியும்.


[windows 7  பாவனையாளர்களுக்கு Folderico 4.0][Windows XP பாவனையாளர்களுக்கு Folderico 3.7]

Folderico மென்பொருளினை உபயோகித்து எவ்வாறு போல்டர் ஒன்றுக்கான வடிவத்தை மாற்றுவது


  1. நீங்கள் எந்த போல்டருக்கு Icon ஐ மாற்ற விரும்புகிறீர்களோ அந்த போல்டரை வலது கிளிக் செய்து  வரும் மெனுவில்  Folderico என்பதை அழுத்தவும்.
  2. பின் வரும் திரையில் Select Icon என்பதை அழுத்தவும்
  3. அதன் பின் தோன்றும் திரையில் Icon Library என்பதில் பிடித்த தொகுதியை தெரிவு செய்து வரும் Icon களில் உங்களுக்கு பிடித்த Icon ஐ தெரிவு செய்யலாம் அல்லது Select Other File  என்பதை தெரிவு செய்து வேறு மென்பொருட்களில் உள்ள Icon களையும் உங்கள் போல்டருக்கு இட்டுக் கொள்ள முடியும்

Folderico க்கான மேலதிக Icon Library Theme களை கீழ் உள்ள தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும்