Social Icons

Sunday, April 29, 2012

பெரிய அளவுள்ள பைல்களை வேகமான Copy செய்ய..

பெரிய அளவுள்ள சில பைல்களையோ அல்லது கோப்புகளையோ கொப்பி செய்திடுகையில் சில வேளைகளில் விண்டோஸ் இயங்க மறுக்கும்.
இதுவே அதிகளவுள்ள பைல்களையுடைய கோப்புகளை கொப்பி செய்திடுகையில் இப்பிரச்சினை ஏற்படும் போது எந்தந்த பைல்கள் கொப்பியாகியுள்ளது, எந்த பைல் கொப்பி ஆகவில்லை என்று கண்டுபிடிப்பது மிகச்சிரமமாகும். இத்தகைய பிரச்சினைகளின் போது என்ன செய்வது என்று திண்டாடுவோம்

இதனை தவிர்த்து மிக வேகமாகவும் விரைவாகவும் பெரிய அளவுள்ள கோப்புகளை காப்பி செய்ய உதவும் ஒரு மென்பொருளே Tera Copy எனும் ஒரு இலவச மென்பொருளாகும்.

இந்த மென்பொருளை கணணியில் நிறுவியபின் நீங்கள் கொப்பி செய்யும் போதல்லாம் தானாகவே இயங்கி வேகமாக கொப்பி செய்யும்.
பெரிய அளவுள்ள பைல்களை  கொப்பி செய்யும் போது அதனை Pause, Resume செய்யும் வசதியும் இதில் உண்டு.
அதுமாத்திரமின்றி பெரிய அளவுள்ள கோப்புகளை காப்பி செய்யும் போது ஏதாவது பைல் ஒன்றை கொப்பி செய்வதில் பிரச்சினை ஏற்படுமாயின் அந்த பைலை விட்டுவிட்டு ஏனைய பைல்களை காப்பி செய்யும் அனைத்து பைல்களையும் கொப்பி செய்து முடித்ததும் பிழையான பைலின் விபரத்தை காட்டும் அதனை சரி செய்து விரைவாக அதனையும் காப்பி செய்யலாம்...

Tera Copy மென்பொருளை தரவிறக்க......
மேலும் விபரமறிய Tera copyயின் உத்தியோக வலைத்தளச்சுட்டிக்கு இங்கு அழுத்துக.



No comments:

Post a Comment