Social Icons

Saturday, April 28, 2012

ஆவணங்களை விரும்பிய வகைக்கு மாற்ற ConvertDoc மென்பொருள்.



இந்த மென்பொருள் பயன்படுத்த எளிமையானது. கணிணியில் பல இடங்களிலிருந்தும் பல வகைகளில் இருக்கும் கோப்புகளை விரைவான வேகத்தில் இது வேண்டிய வகைக்கு மாற்றித் தருகிறது. ( Document converting)
சில நேரம் நம்மிடம் உள்ள பிடிஎப் ( Pdf ) கோப்புகளை வேர்டு டாகுமெண்ட்டாக ( Word document ) மாற்ற வேண்டியிருக்கும். மேலும் வேர்டு கோப்புகளை பிடிஎப் கோப்புகளாக மாற்ற நினைப்போம்.
இரண்டும் வெவ்வேறு வகைகளாயினும் நமது குறிப்பிட்ட வசதிகளுக்காக மாற்றுவோம். இதற்கு ஒரு இலவச மென்பொருள் உள்ளது. இதன் பெயர் ConvertDoc ஆகும்.

இந்த மென்பொருள் மூலம் Pdf, doc, docx, txt, htm, rtf போன்ற முக்கிய ஆவண வடிவங்களிலிருந்து மேற்கண்ட வகைகளில் ஒன்றினுக்கு மாற்றிக்கொள்ள முடியும்.
இதில் வேண்டிய கோப்புகளை தேர்வு செய்து விட்டு என்ன வகைக்கு ( Output type) மாற்ற வேண்டும் என்பதையும் எங்கே சேமிக்கப்பட வேண்டும் (Output folder ) என்பதையும் தேர்வு செய்து விட்டு Convert பட்டனை கிளிக் செய்தால் போதும்.
இந்த மென்பொருள் விண்டோஸ் இயங்குதளங்குகளில் மட்டுமே செயல்படும்.

No comments:

Post a Comment