Social Icons

Thursday, November 22, 2012

கம்பியில்லாமல் கணினிகளை இணைத்திட MyRouter


இந்த பயன்பாடானது 1 நம்முடைய கணினியை ஒரு கம்பியில்லா இணைப்பு மையமாக (WiFi hotspot) செயல்பட அனுமதிக்கின்றதுநம்மிடம் புதிய வகை டேப்லெட் கணினி,ஸ்மார்ட் போன்,  வொய் ஃபி இணைப்பில் இயங்கிடும் camera, blue ray player என்பன  போன்ற சாதனங்கள் உள்ளன ஆனால் நம்மிடம் கம்பியுடன் இணைப்புகொண்ட இணைய இணைப்பு மட்டுமே உள்ளது எனில் இவைகளை இணைப்பதற்கு ஒரு நிரந்தரமான வழிசெலுத்தியோ(permanent Router) அல்லது வேறு ஏதேனுமொரு சாதனமோ தேவையில்லை  நம்முடைய கணினியானது ஒருwireless adapter  ஆல் முன்கூட்டியே கட்டமைக்கபட்டதாக இருந்தால் போதுமானது  அதனுடன் கூடுதலாக இலவசமாக கிடைக்ககூடிய MyRouter.என்ற பயன்பாட்டுமென் பொருள் மட்டும் போதுமானதாகும்

2 நம்முடைய WiFi network ஐ நம்முடைய சொந்த பெயருடன்கூடியSSID  வலைஇணைப்பாகவும் கடவுச்சொற்களுடனும் செயல்படுமாறும் மறுவெளியீடு செய்கின்றது
3 வலைஇணைப்பு மையத்தில் (network hotspot) யாராவது புதியவர்கள் இணைப்பு பெற்று செயல்பட்டால் அவர்கள் யார்என அறிந்துகொள்ள உதவுகின்றது
4 மற்ற கணினிகளில் மட்டும்நம்முடைய இணைய இணைப்பை தொலைபேசி அல்லது வேறு சாதனம் எதுவமில்லாமலேயே பகிர்ந்து கொள்ள அனுமதிக்கின்றது
5 வளாக பினையம் (LAN)அல்லது உள்ளூர் இணைப்பு(Local network) போன்று இணைப்பு வாயில்களை(port) மூடவும் திறக்கவும் அனுமதிக்கின்றது
இதனை செயற்படுத்திட
1விண்டோ7 அல்லது விண்டோ8 R இயக்கமுறைமை
2விண்டோ எக்ஸ்பி,விண்டோ விஸ்டா எனில் தற்காலிகமாகமட்டும்
3இந்த இயக்கமுறைமையில்  Adminஆக உள்நுழைவதற்கான அனுமதி
4 கம்பியில்லா வலைபின்னலுக்கான அட்டை (Wireless network card)
5 மைக்ரோசாப்ட் .நெட் ப்ரேம்வொர்க் 4.0 ஆகியவை மட்டும் தேவையானவையாகும்
இந்த MyRouter.என்ற பயன்பாட்டுமென் பொருளை http://myroutervwr.info/download.php
என்ற இணையபக்கத்திலிருந்து பதிவிறக்கம் செய்து நம்முடைய கணினியில் நிறுவிக்கொள்க பின்னர் startஎன்ற பட்டி மூலம் இதனை செயற்படுத்துக
 உடன் விரியும் MyRouter(Virtual WiFi Router) என்ற உரையாடல் பெட்டியில் wifi Name என்பதில் skRouter என்று நாம்விரும்பும் பெயரையும் Password என்பதில் ****என்றவாறு எளிதில் நினைவில் கொள்ளுமாறான சொற்களையும் net work card என்பதில்Local Area Connection என்றும் Max Peers  என்பதில் நாம் விரும்பும் எண்ணிக்கையையும்  படத்தில் உள்ளவாறு அமைத்துகொண்டு  connect என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
பிறகு இங்கு நாம் கம்பியில்லா இணைப்பை பெற இருப்பதால்  startஎன்ற பட்டியில்WiFi setup  என்ற திரையை தோன்றசெய்து அதில் Router பெயராக நாம் ஏற்கனவே வழங்கிய Router _  skRouterஎன உள்ளீடு செய்துகொள்க
அவ்வளவுதான் இனி நம்முடைய கணினியில் மேலே கூறிய அனைத்து பயன்களையும் பெறமுடியும்

Monday, November 19, 2012

கணனியிலிருந்து உங்கள் கண்களை கண்களை பாதுகாக்க !


 

நம்முடைய கணணியை காப்பாற்ற antivirus, firewall போன்ற பலவற்றை பயன்படுத்துகிறோம். ஆனால் நம் உடல் நலனை பாதுகாப்பதை பலர் மறந்துவிடுகிறோம்.

 
அதிக நேரம் கணணி முன் வேலை செய்பவர்களுக்கும், பார்ப்பவர்களுக்கும் இது மிகவும் பயன்படும். இரவு நேரங்களில் அதிகம் கணணியில் பணிபுரிபவர்கள் எனில் உங்கள் கண்கள் சோர்வடைவதை உணர்ந்திருப்பீர்கள்.
பகல் நேரங்களில் உங்கள் மொனிட்டர் திரை நன்கு பிரகாசமாக தெரியும். அவை பகல் வெளிச்சத்திற்கு ஏற்றவாறு அமைக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இரவில் அதிக வெளிச்சம் நம் கண்களுக்கு எரிச்சலூட்டும்.
 நம் மொனிட்டரின் வெளிச்சத்தை பகலிலும், இரவிலும் அடிக்கடி மாற்றிக் கொண்டிருக்க முடியாது. எனவே இந்த மென்பொருள் உங்களுக்கு உதவும்.
 இது தானாகவே பகலிலும், இரவிலும் உங்கள் இடத்தின் வெளிச்சத்திற்கும், நேரத்திற்கும் ஏற்றவாறு உங்கள் மொனிட்டரின் வெளிச்சத்தை மாற்றும்.
 இதனை தரவிறக்கியதுடன் உங்கள் கணணியில் நிறுவி கொள்ளுங்கள். பிறகுChange Settings சென்று

இணையப் பக்கங்களை பி.டி.எப் ஆக மாற்ற வேண்டுமா?


பல வேளைகளில் , நாம் பார்க்கும் போது பக்கங்களை அவை தரும் தகவல்களுக்காக, சேவ் செய்திட விரும்புவோம். அனைத்துப் பிரவுஸ்சர்களும் இதற்கான வசதியைத் தருகின்றன. பிரவுசரின் எடிட் மெனுவில் க்ளிக் செய்து கிடைக்கும் மெனுவில், சேவ் அல்லது சேவ் ஆஸை தேர்ந்தெடுத்து பைலை பதிந்திடலாம். ஆனால் இது எச்.டி.எம்.எல். பைலாகத் தான் இருக்கும். அவ்வாறு பதிவது நமக்கு உகந்ததாக இருக்காது. ஏனென்றால் தேவையற்ற பல விஷயங்களுடன், பைல்களுடன் அந்தப் பைல் பதிவாகும். ஒரு டொக்கியுமென்டாக பதிவாகாது. ஆனால் இதனையே ஒரு பி.டி.எப் பைலாக பதிந்தால், ஒரே பைலாக அனைத்துத் தகவல்களுடன் கூடிய பைல் ஒன்று கிடைக்கும். இதனை மற்றவர்கள் பெற்றுப் பயன்படுத்துவதும் எளிதாகும்.

சரி, இணையத்தளப் பக்கத்தினை எப்படி பி.டி.எப் பைலாக மாற்றுவது? இதற்கு உதவிடும் வகையில் கிடைப்பது
 Joliprint bookmarklet என்னும் புரோகிராம் ஆகும். புக்மார்க்குகள் பயன்படுத்தும் அனைத்து பிரவுசர்களிலும் இது இயங்கும்.

புக்மார்க்லெட் என்பதும் ஒருவகை புக்மார்க் தான். புக் மார்க்குகள் அனைத்தும் ஏதேனும் ஒரு இணையத்தளத்தின் சுருக்கு வழிகளாக அமையும். ஆனால் இந்த புக்மார்க்லெட் ஜாவா ஸ்கிரிப்ட் குறியீடுகள் அமைந்ததாக இருக்கும்.

இவை இயக்கப்பட்டவுடன், குறிப்பிட்ட இணையத் தளத்துடன் இணைந்து இயங்கும். தானாகவே இணையத் தளத்தினை ஒரு பி.டி.எப் பைலாக மாற்றும். இந்த புக்மார்க்லெட்டில் க்ளிக் செய்து விட்டு, அது மாற்றப்பட்டு கிடைப்பதனை நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கலாம்.

இதன் இயக்கத்தில் இன்னொரு சிறப்பு என்னவெனில், இணையப் பக்கத்தில் உள்ள தேவையற்ற மெனு, விளம்பரங்களை இது தானாகவே நீக்கி விடுகின்றது. போர்மட்டிங், லிங்க்ஸ், கட்டுரைக்கான படங்கள் ஆகியவற்றை மட்டும் தக்கவைத்துக் கொள்கிறது.

இந்த புரோகிராம் இயங்கும் போது, கணினியுடன் இணைந்த இன்டர்நெட் இணைப்பு இயங்கிக் கொண்டிருக்க வேண்டும். ஜோலிபிறின்ட் புரோகிராமினை,நாம் கணினியில் இன்ஸ்டோல் செய்திடத் தேவையில்லை.

ஜோலிபிறின்ட் இணையத்தளத்தில் இதன் ஐகனைக் க்ளிக் செய்து, இழுத்து புக்மார்க்காக அமைந்துவிட்டால் போதும். பின் தேவைப்படுகையில் இந்த புக்மார்க்கில் க்ளிக் செய்து, இணையத்தளங்களை பி.டி.எவ்.பைலாக மாற்றலாம்.

இந்த ஜோலிபிறிண்ட் புரோகிராமினைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய இணையத்தள முகவரி http://joliprint.com/bookmark-instructions/

Sunday, November 18, 2012

உங்கள் Folder யை பல நிறங்களில் மாற்றிட !

விண்டோசில் உள்ள கோப்பறைகளை எளிதில் அடையாளம் கண்டறியும் வகையில் பல்வேறு விதமான வண்ணங்களில் மாற்றலாம். இதற்கு முதலில் Folder Colorizer என்ற லிங்கில் கிளிக் செய்து 1.28MB அளவுடையை சிறிய மென்பொருளை உங்கள் கணணியில் தரவிறக்கம் செய்து நிறுவிக் கொள்ளவும். இதன் பிறகு Free Activation என்ற விண்டோ வந்தால் உங்கள் மின்னஞ்சலை கொடுத்து Register செய்து கொள்ளவும். அங்கு உள்ள டிக் மார்க் எடுத்துவிடவும். இதன்பிறகு நீங்கள் கொடுத்த மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு Verification Link அனுப்புவார்கள், அதை கிளிக் செய்து இந்த மென்பொருளை இலவசமாக ஆக்டிவேட் செய்து கொள்ளுங்கள். ஆக்டிவேட் செய்யாவிட்டாலும் இந்த மென்பொருளை உபயோகிக்க முடியும்.


கணணியை Restart செய்யாமல் கோப்பும் அழிக்க வேண்டுமா?

animated gif
பலமுறை நாம் ஏதேனும் பைல்களை அழிக்க முற்படுகையில் சில எரிச்சலூட்டும் செய்திகள் காட்டப்பட்டு நம் முயற்சியில் குறுக்கே நிற்கும். அந்த செய்திகள் பின்வருமாறு இருக்கலாம்

*இன்னொரு புரோகிராம் இந்த பைலை பயன்படுத்திக் கொண்டுள்ளது.

*பைலைப் பகிர்ந்து கொள்வதில் வரையறை மீறப்பட்டுள்ளது.

*இன்னொரு புரோகிராம் அல்லது இன்னொரு யூசர் இதனைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

*டிஸ்க் முழுமையாக இல்லை அல்லது எழுதப்படவிடாமல் பாதுகாக்கப்பட்டுள்ளது.

*பைல் இப்போது பயன்பாட்டில் இல்லை.

*சோர்ஸ் அல்லது டெஸ்டினேஷன் பைல் ஒருவேளை பயன்பாட்டில் இல்லை.

இணைய உதவியுடன் FAX அனுப்ப மென்பொருள்


Snappy Fax v4.30.1.2

Snappy தொலைநகல் அதன் விலை வரம்பில் எந்த தனியாக தொலைநகல் திட்டத்தின் அம்சங்கள் மிக விரிவான தொகுப்பை உள்ளடக்கியுள்ளது. இந்த விஷயத்தில், நாம் பல அம்சங்கள் போன்ற என்று எந்த விலை வரம்பில் எந்த தொலைநகல் திட்டத்தின் தெரியாது. 1999 ல் இருந்து, உலகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான பயனர்களின் தொலைப்பிரதிகள் அனுப்ப மற்றும் பெற எங்கள் தொலைநகல் மென்பொருள் பயன்படுத்தி வருகின்றனர். Snappy தொலைநகல் மிகவும் மலிவு விலையில் சுற்றி எந்த தொலைநகல் மென்பொருள் அமைக்க மிக விரிவான அம்சம் உள்ளது - Snappy தொலைநகல் திருட ஒரு உண்மை

Wednesday, November 14, 2012

விண்டோஸ் இயங்குதளத்தை லாக் செய்வதற்கு

 

உங்களது கணணியில் வங்கி கோப்புகள், அலுவலகம் சம்பந்தமான தகவல்கள் மற்றும் பல்வேறு விதமான தகவல்களை வைத்திருப்பீர்கள்.
இத்தகவல்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவதற்கு மிகச்சிறந்த வழி உங்களது இயங்குதளத்தை லாக் செய்வதே.
இவ்வாறு செய்யும் பட்சத்தில் உங்களது கணணியை எவராலும் உபயோகப்படுத்த முடியாது. கணணியில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது ஏதோ ஒரு காரணங்களால் கணணி அப்படியே வைத்துவிட்டு சென்று விடுவோம்.
ஆனால் ஒருசிலர் இதனை தவறாக பயன்படுத்திக் கொள்வர், நம் தகவல்களை திருடவோ அல்லது அல்லது நம் தகவல்களை அழிக்கவோ வாய்ப்பு உண்டு.
இது போன்ற சூழ்நிலையை சமாளிக்க இயங்குதளத்தை லாக் செய்து கொண்டால் பாதுகாப்பாக இருக்கும். இதற்கு WinLockPro என்ற மென்பொருள் உதவி புரிகிறது.
இதற்கு முதலில் இந்த மென்பொருளை தரவிறக்கி உங்கள் கணணியில் நிறுவிக் கொள்ளவும். பின் ஒரு முறை கணணியை மறுதொடக்கம் செய்துவிட்டு WinLockPro மென்பொருளை ஒப்பன் செய்யவும்.
பின் பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு சேமித்துக்கொள்ளவும். Select Background என்னும் பொத்தானை அழுத்தி வேண்டிய படத்தை தெரிவு செய்து கொள்ளவும்.
பின் Start on Windows startup என்னும் பொத்தானை அழுத்தி மீண்டும் கணணியை ஒரு முறை மறுதொடக்கம் செய்து கொள்ளவும். பின் வேண்டும் போது இந்த WinLockPro மென்பொருளை ஒப்பன் செய்து கொள்ளவும்.
கடவுச்சொல்லை உள்ளிட்டு பின் லொகின் செய்து திறந்து கொள்ள முடியும். இது பல்வேறு வகையில் நமக்கு உதவிடும்.
 

Wednesday, October 31, 2012

டேட்டா ரெகவரி செய்ய மென்பொருள்

கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் பலர் தங்களின் முக்கியமான டேட்டா அடங்கிய பைல்களை மீண்டும் எடுக்க முடியாத அளவில் அழித்துவிட்டு இதனை எப்படி மீண்டும் பெறுவது என்று தவிக்கின்றனர். பல முறை இந்த பக்கங்களில் பைல் பாதுகாப்பு குறித்து எழுதினாலும் இந்த பைல் இழக்கும் விபத்து நடந்து கொண்டே தான் இருக்கிறது. இழந்த பைல்களை மீட்டுத் தரும் இலவச புரோகிராம்கள் பல இணையத்தில் உள்ளன. சில, இலவச பதிப்பினையும் கூடுதல் வசதிகளுடன் கூடிய கட்டணம் செலுத்திப் பெறும் பதிப்பினையும் கொண்டதாக இருக்கின்றன.அந்த வகையில் நன்றாகச் செயல்படும் டேட்டா ரெகவரி புரோகிராம் ஒன்று அண்மையில் இணையத்தில் தென்பட்டது. இதன் பெயர் ‘Raid2Raid’.

இந்த புரோகிராம் பல்வகைத் திறன் கொண்டது. இது ஹார்ட் டிஸ்க், பிளாஷ் டிரைவ் மற்றும் மெமரி கார்டுகளிலிருந்து பைல்களை மீட்டுத் தருகிறது. இணைத்து அறியக் கூடிய டிரைவில் உள்ள தொலைந்து போன பைல் எனில் அதனைக் கம்ப்யூட்டருடன் இணைத்து, மீட்கப்படும் பைல்களை ஹார்ட் டிஸ்க்கில் பதியும் படி செட் செய்யப்படுகிறது.

பிரச்சினைக் குண்டானது ஹார்ட் டிஸ்க் எனில் சம்பந்தப்பட்ட டிரைவினை ஒரு இமேஜாகவும் கொடுக்கிறது. இந்த இமேஜை எங்கேணும் பதிந்து பாதுகாக்கும் படி வைத்துவிட்டு, சம்பந்தப்பட்ட ஹார்ட் டிஸ்க்கினை பார்மட் செய்திடலாம். பின் இமேஜைப் பயன்படுத்தி அழிக்கப்பட்ட பைல்களைப் பெறலாம். டவுண்லோட் செய்த இந்த புரோகிராமில் டபுள் கிளிக் செய்து இதனை இயக்க வேண் டும். பின் எந்த டிரைவில் இருந்து பைல்களை ரெகவர் செய்திட வேண்டுமோ அதன் மீது டபுள் கிளிக் செய்திட வேண்டும். சில நிமிடங்களில் அந்த டிரைவில் உள்ள அனைத்து பைல்களும், மீட்கப்படக் கூடிய பைல்களின் பெயர்கள் உட்பட, காட்டப்படும்.

எந்த பைல்களை மீட்க வேண்டுமோ அவற்றின் மீது கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் ‘Recover this file’ என்பதைத் தேர்ந்தெடுத்தால் பைல் மீண்டும் கிடைக்கும். அதற்கு முன் மீட்கப்படும் பைல் எங்கு சேவ் செய்யப்பட வேண்டும் என்பதனையும் தீர்மானித்துத் தேர்ந்தெடுக்க வேண்டும்.


தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்

Sunday, October 14, 2012

இணையப் பக்கங்களை PDFஆக மாற்ற


பல வேளைகளில் , நாம் பார்க்கும் போது பக்கங்களை அவை தரும் தகவல்களுக்காக, சேவ் செய்திட விரும்புவோம். அனைத்துப் பிரவுஸ்சர்களும் இதற்கான வசதியைத் தருகின்றன. பிரவுசரின் எடிட் மெனுவில் க்ளிக் செய்து கிடைக்கும் மெனுவில், சேவ் அல்லது சேவ் ஆஸை தேர்ந்தெடுத்து பைலை பதிந்திடலாம். ஆனால் இது எச்.டி.எம்.எல். பைலாகத் தான் இருக்கும். அவ்வாறு பதிவது நமக்கு உகந்ததாக இருக்காது. ஏனென்றால் தேவையற்ற பல விஷயங்களுடன், பைல்களுடன் அந்தப் பைல் பதிவாகும். ஒரு டொக்கியுமென்டாக பதிவாகாது. ஆனால் இதனையே ஒரு பி.டி.எப் பைலாக பதிந்தால், ஒரே பைலாக அனைத்துத் தகவல்களுடன் கூடிய பைல் ஒன்று கிடைக்கும். இதனை மற்றவர்கள் பெற்றுப் பயன்படுத்துவதும் எளிதாகும்.

சரி, இணையத்தளப் பக்கத்தினை எப்படி பி.டி.எப் பைலாக மாற்றுவது? இதற்கு உதவிடும் வகையில் கிடைப்பது Joliprint bookmarklet என்னும் புரோகிராம் ஆகும். புக்மார்க்குகள் பயன்படுத்தும் அனைத்து பிரவுசர்களிலும் இது இயங்கும்.

புக்மார்க்லெட் என்பதும் ஒருவகை புக்மார்க் தான். புக் மார்க்குகள் அனைத்தும் ஏதேனும் ஒரு இணையத்தளத்தின் சுருக்கு வழிகளாக அமையும். ஆனால் இந்த புக்மார்க்லெட் ஜாவா ஸ்கிரிப்ட் குறியீடுகள் அமைந்ததாக இருக்கும்.

இவை இயக்கப்பட்டவுடன், குறிப்பிட்ட இணையத் தளத்துடன் இணைந்து இயங்கும். தானாகவே இணையத் தளத்தினை ஒரு பி.டி.எப் பைலாக மாற்றும். இந்த புக்மார்க்லெட்டில் க்ளிக் செய்து விட்டு, அது மாற்றப்பட்டு கிடைப்பதனை நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கலாம்.

Delete செய்ய மறுக்கும் பைல்களை Delete செய்வதற்கு

சில வேளைகளில், பைல்களை அழிக்க முற்படுகையில் அது அழிய மறுக்கும். கீழ் காட்டப்படும் செய்தியில் ஒன்று நமக்குக் காட்டப்படும்.

Cannot delete file: Access is denied
There has been a sharing violation.
The source or destination file may be in use.
The file is in use by another program or user
Make sure the disk is not full or write –protected and that the file is not currently in use.


பைலை அணுக இயலவில்லை. இந்த பைலுக்கு உங்களுக்கு வழி இல்லை. பைல் பயன்பாட்டில் உள்ளது. இன்னொருவர் இதே பைலை பயன்படுத்திக் கொண்டுள்ளார். இன்னொரு புரோகிராம் பயன்படுத்திக் கொண்டுள்ளது. பைல் அழிக்கப்படாமல் இருக்க, டிஸ்க் பாதுகாக்கப்பட்டுள்ளது என்ற வகையில் செய்திகள் கிடைக்கலாம். 

அழிக்க மறுக்கையில் மட்டுமன்றி, பைலுக்கு வேறு பெயர் இட முயற்சிக்கையில், ஓரிடத்திலிருந்து நகர்த்த முயற்சிக்கையிலும் இது போன்ற செய்திகள் கிடைக்கும். இவற்றை எல்லாம் மீறி நாம் பைலை அழிக்க எண்ணினாலும், இந்தச் செய்தி எதனால் வருகிறது என்று கண்டறிவதில் நேரம் செலவழியும். இதற்குத் தீர்வாக நமக்குக் கிடைத்திருப்பது அன்லொக்கர் (unlocker) என்னும் புரோகிராம். 

இதனை http://page2rss.com/page?url=ccollomb.free.fr/unlocker/ என்ற தளத்தில் பெறலாம். 

இந்தப் பைலை இலவசமாக இணையத்தளத்திலிருந்து இறக்கி, இன்ஸ்டோல் செய்துவிட்டால், விண்டோஸ் இது போன்ற செய்தி தருகையில், அன்லொக்கர் புரோகிராமை, அந்தப் பைலின் பெயர் அல்லது ஃ போல்டரின் பெயரில் ரைட் க்ளிக் செய்து இயக்கத்திற்கு கொண்டுவரலாம்.

அப்போது அந்தப் பைலை ஃ போல்டரை அழிக்கவிடாமல் தடுக்கும் லொக்கர்கள் பட்டியலிடப்படும். மெனுவில் Unlock என்பதில் க்ளிக் செய்தால் , அனைத்து லொக்கர்களும் விலக்கி கொள்ளப்பட்டு,பைல் அழிக்கப்படும் அல்லது நீங்கள் விரும்பும் வேலையை மேற்கொள்ள வழிகிடைக்கும். 

Pen Driver யை பாதுகாக்க சிறந்த நான்கு Software

                                       pen drive என்பது இப்பொழுது கணணி உபயோகிப்பவர்கள் அனைவரும் உபயோகித்து கொண்டு இருக்கும் ஒரு பொருளாகும். இதன் மூலம் நமக்கு தேவையான கோப்புகளை சேமித்து கொண்டு மற்றவர்களுக்கோ அல்லது வேறொரு கணணியில் பதியவோ உபயோகப் படுத்தப்படுகிறது. இந்த பென்ரைவ்களில் என்ன பிரச்சினை என்றால், இதில் எளிதில் வைரஸ் பரவும் பாதிப்பு உள்ளது. ஆகையால் நம் கணணிக்கும் வைரஸ் பரவி விடுகிறது. நம் பென்ரைவ் பாதுகாக்க சிறந்த நான்கு மென்பொருட்கள் கீழே தரப்பட்டுள்ளன.

1. USB WRITE PROTECTOR
இந்த மென்பொருள் உங்களுடைய பென்ரைவ்களில் உள்ள கோப்புகளை மற்றவர்கள் படிக்க மட்டுமே அனுமதிக்கும். இந்த கோப்புகளை அவர்கள் திருத்துவதற்கு இந்த மென்பொருள் அனுமதிக்காது.

இதனால் உங்கள் பென்ரைவ் நீங்கள் யாருக்கு வேண்டுமென்றாலும் பயப்படாமல் கொடுத்து அனுப்பலாம். மற்றும் வைரசினால் இந்த பென்ரைவ்களை கண்டறிய முடியவில்லை.

 http://www.gaijin.at/dlusbwp.php  இந்த லிங்கினூடாக மென்பொருளை டவுன்லோட் செய்யுங்கள் 

2. USB FIREWALL
பென்ரைவ் உபயோகிக்கும் பெரும்பாலானோர் உபயோகிக்கும் மென்பொருள். இது USB யில் இருந்து கணணிக்கு வைரஸ் பரவாமல் இருக்க பயன்படுகிறது. இதை DOWNLOAD செய்து இயக்கியவுடன் இந்த மென்பொருள் உங்கள் கணணியின் பின்பக்கத்தில் வேலை செய்து கொண்டிருக்கும்.

ஏதேனும் வைரஸ் உங்கள் கணணியில் ஊடுருவ முயற்சிக்கும் போது இந்த மென்பொருள் நமக்கு எச்சரிக்கை கொடுக்கிறது.

          http://www.net-studio.org/eng/usb-firewall.html  இந்த லிங்கினூடாக மென்பொருளை டவுன்லோட் செய்யுங்கள் 

3. PANDA USB VACCINATION TOOL
பாண்டா நிறுவனம் வழங்கும் இலவச மென்பொருளாகும். இந்த மென்பொருளை நம் கணணியில் நிறுவினால் பென்ரைவில் உள்ள autorun.inf கோப்பை முற்றிலுமாக தடைசெய்கிறது.

உங்கள் பென்ரைவில் தானே இயங்கும் வசதி தடுக்கப்படுவதால் வைரஸ் பரவும் வாய்ப்பு முற்றிலுமாக குறைகிறது. இந்த மென்பொருளுக்கு நமக்கு தேவையான சோட்கட் தேர்வு செய்யும் வசதியும் உள்ளது.

       http://download.cnet.com/Panda-USB-Vaccine/3000-2239_4-10909938.html  இந்த லிங்கினூடாக மென்பொருளை டவுன்லோட் செய்யுங்கள் 

4. USB GUARDIAN
இந்த மென்பொருள் உபயோகிக்க மிகவும் சுலபமானது. இதன் மூலம் பாதுகாப்பாக நமக்கு தேவையான கோப்புகளை சேமித்து கொள்ள முடியும். வைரஸ் பாதிக்கும் என்ற கவலையே வேண்டாம். இதன் மூலம் நமக்கு தேவையான கோப்பை நாம் lock செய்தும் வைத்து கொள்ளலாம்.

 http://www.usb-guardian.com/   
இந்த லிங்கினூடாக மென்பொருளை டவுன்லோட் செய்யுங்கள்

Friday, July 6, 2012

KEYBOARD LOCKER...அவசியம் பயன்படும்



கீழே இருக்கும் லிங்க் கிளிக் செய்து தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். உங்கள் கணினிக்கு ஜிப் வடிவில் SCRIPT(AUTOHOTKEY) தரவிறக்கம் ஆகிவிடும். பிறகு அதனை திறந்து (UNZIP) கீழ தந்திருக்கும் ஸ்கிரிப்ட்டை ரன் செய்தால் அதாவது டபுள் கிளிக் செய்தால் உங்கள் கணினி டாஸ்க்பாரில் சின்ன ஐகான் வந்துவிடும். படத்தில் பார்க்கவும்.


Instell செய்து  முடிந்ததும் 
 இனிமேல் உங்களுக்கு  தேவையான சமயங்களில் கீ போர்டில் CONTROL+ALT+L கிளிக் செய்தால் உங்கள் கீ போர்ட் லாக் ஆகிவிடும்.திரும்பவும் UNLOCK செய்ய கீ போர்டில் "UNLOCK " என்று டைப் செய்தால் போதும்.



நமக்கு தேவையான நேரங்களில்  SCRIPT ரன் செய்து பயன்படுத்தி கொள்ளலாம்.எப்பொழுதும் இந்த வசதி STARTUP MENUவில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைப்பவர்கள் கீழே இருப்பதை போல் செய்யவும்.


(*)  உங்கள் கணினி திரையில் எதாவது ஒரு இடத்தில் ரைட் கிளிக் செய்து          NEW  -     SHORTCUT
(*) தரவிறக்கம் செய்து வைத்துள்ள இடம்.

(*)  START - PROGRAMS - STARTUP - KEYBOARD LOCKER  வந்துவிடும் .

             மிக எளிதாக செய்யலாம் தேவையானவர்கள் பயன் படுத்தி பாருங்கள்.


** - கீ போர்டுக்கு தமிழில் விசைப்பலகை.வரும் பதிவுகளில் விசைப்பலகை என்று பயன்படுத்தப்படும்.

Thursday, July 5, 2012

ஸ்கைப் உரையாடலின் ​போது குரலை மாற்றுவதற்​கு




உலகில் அதிகளவான பயனர்களால் பயன்படுத்தப்படும் முன்னணி வீடியோ தொடர்பாடல் மென்பொருளான ஸ்கைப்பில் தொடர்பு கொள்ளும் போது குரலை மாற்றியமைப்பதற்கு Skype Voice Changer எனும் மென்பொருள் துணைபுரிகின்றது.
இம்மென்பொருளின் உதவியுடன் ஆண்கள், பெண்களின் விதம் விதமான குரலை மாற்றக் கூடியதாகக் காணப்படுவதுடன், உரையாடலின் போது பின்னணி இசையினையும் செயற்படுத்த முடியும்.

தவிர குறித்த பின்னணி இசையின் பிச்சினையும் மாற்றியமைக்க முடியும். இவற்றுடன் குறித்த உரையாடலை பதிவு செய்து கொள்ளவும் இம்மென்பொருள் உதவிபுரிகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தரவிறக்க சுட்டி

Wednesday, June 6, 2012

Adobe AIR 3 மென்பொருளை​த் தரவிறக்கம் செய்வதற்கு

Adobe AIR 3 என்பது கணணியின் வன்பொருட் பாகங்களை ஒருங்கிணைத்து இயங்கச் செய்தும் இயங்கு முறைமை(cross-operating system) போன்றது.
இம் மென்பொருளின் உதவியுடன் இணையத்தளங்களுடன் தொடர்பான புதிய வினைத்திறனான மென்பொருட்களை உருவாக்கி பயன்படுத்திக் கொள்ள முடியும்.


அதாவது network, user connectivity, rich media content, ease of development, and broad reach போன்றவற்றை மிகவும் எளிமையான முறையில் உருவாக்கிக் கொள்ள முடியும். இதற்கென இலகுவான பயனர் இடைமுகத்தைக் கொண்டு காணப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் இம்மென்பொருளானது விண்டோஸ், லினக்ஸ், அப்பிளின் மக் போன்ற இயங்குதளங்களிலும் செயற்படக்கூடியதாக காணப்படுகின்றது.

தரவிறக்க சுட்டி

Monday, April 30, 2012

கணணியில் கோப்புகளை முழுவதுமாக நீக்குவதற்கு



கணணியில் இருக்கும் தனிப்பட்ட கோப்புக்களை மற்றவர்களிடமிருந்து பாதுகாப்பதற்காக பல நடைமுறைகளை பயன்படுத்துவீர்கள். 

எனினும் தனிப்பட்ட கோப்புக்களின் பயன்பாடு முடிந்தவுடன் அவற்றை கணணியிலிருந்து ரீக்கவர் செய்ய முடியாதவாறு முழுவதுமாக நீக்கிவிட விரும்புவீர்கள். 

FileWing என்ற மென்பொருள் இதையே செய்கின்றது. இந்த மென்பொருள் மூலம் நீங்கள் ஏற்கனவே அழித்துவிட்ட கோப்புக்களை ரீகவர் செய்வதுடன் அவற்றை முழுவதுமாக அழித்தும் விடலாம். 

FileWing ஐ முதல் முறை பயன்படுத்த தொடங்கும் போது unlock code ஐ பெற்றுக்கொள்வதற்காக மின்னஞ்சல் முகவரி தரவேண்டும். 

பின்னர் டிஸ்க்கை ஸ்கான் செய்ய அல்லது கோப்புக்களை, டிரைவ்களை அழிப்பதற்கென இரு ஆப்ஸன்கள் காட்டும். 

முற்றுமுழுதாக கணணியில் கோப்புக்களை நீக்கிவிட Quick Deletion இலிருந்து shredding method ஐ தெரிவு செய்ய வேண்டும். 

GOST, DoD (E), DOD(ECE), Bruce Schneider, VSITR மற்றும் Peter Gutmann போன்ற முறைகளில் கோப்புக்களை நீக்கலாம். தெரிவு செய்த பின்னர் Delete Files ஐ அழுத்துங்கள். 

கணணியிலிருந்து வழமையான முறையில் அழிக்கப்பட்டும் கோப்புக்களை ரீகவர் செய்யவதற்கு ஸ்கான் டிஸ்க்ட் ஆப்ஸனை தந்து பின்னர் ரீகவர் செய்யப்பட வேண்டிய இடத்தையும் தெரிவு செய்யுங்கள். 

தரவிறக்க சுட்டி

Sunday, April 29, 2012


இன்று அனைவராலும் Pen Drive பயன்படுத்தப்பட்டு வருகிறது, அதில் நாம் பல வகையான பைல்களையும் கோப்புகளையும் வைத்திருப்போம்.
அதில் சில அலுவலக ரகசிய பைல்களாகவோ அல்லது நமது தனிப்பட்ட பைல்களாகவோ இருக்கும். நமது பென் ரைவினை நண்பர்களுக்கு அவசர பயன்பாட்டுக்கு கொடுக்கும் போது அதில் உள்ள நமது ரகசிய கோப்புகளை பார்ப்பதற்காள வாய்ப்புக்கள் ஏற்படுகின்றது.

இத்தகைய இக்கட்டான சூழ்நிலையை தடுக்க நமது ரகசிய ஆவணங்களை மற்றையவா்கள் பார்க்க முடியாதவாறு பென் ரைவில் மறைத்து வைத்தல் வேண்டும். இதற்கு 1.69MB அளவையே கொண்டWinMend Folder Hidden எனும் ஒரு சிறிய மென்பொருள் உங்களுக்கு உதவிடும்.

இந்தமென்பொருளை பயன்படுத்தி உங்கள் Pen Drive ல் மறைக்கப்பட்ட கோப்புகளை வேறு எந்தக் கணனியிலும் திறக்க முடியாது.

இந்த மென்பொருளின் மூலம் உங்கள் பென் ரைவில் மாத்திரமின்றி உங்கள் கணணியில் உள்ள கோப்புகளையும் மறைக்க பயன்படுத்தலாம்

WinMend Folder Hiddenமென்பொருளின் தரவிறக்க சுட்டி இங்கு அழுத்தவும்

உங்கள் கணணியில் WinMend Folder Hidden  மென்பொருளினை நிறுவியபின் முதலில் திறக்கும் போது கீழே உள்ளது போன்று ஒரு விண்டோ திறக்கும் அதில் உங்கள் கடவுச்சொல்லை கொடுத்து OK ஐ அழுத்தவும்.
பின் கீழ் உள்ளதை போன்று விண்டோ திறக்கும் இதில் Hide Folder அல்லது Hide File(s)  என்பதனை அழுத்தி உங்கள் ஆவணங்களை தேர்வு செய்து விட்டு விண்டோவை மூடி விடவும்.

இப்போது நீங்கள் தோ்வு செய்த ஆவணங்கள் அல்லது கோப்புகள் மறைக்கப்பட்டு காணப்படும். இப்போது உங்கள் பென் ரைவில் நீங்கள் மறைத்த ஆவணம் உங்கள் கணணியில் மாத்திரமின்றி வேறு கணனியிலும் காட்டாமல் மறைக்கப்பட்டிருக்கும்.

மறைக்கப்பட்ட கோப்புகளை மீண்டும் செயற்படுத்த WinMend Folder Hidden மென்பொருளை திறக்கவும் திறக்கும் போது உங்கள் கடவுச்சொல்லை உள்ளிடும் படி கேட்டும்

உங்கள் கடவுச்சொல்லை உள்ளிட்ட பின் கிடைக்கும் திரையில் Unhide என்பதை அழுத்தி பார்வையிடலாம்.

மேலதிக தகவலுக்கு WinMend Folder Hidden மென்பொருளின் உத்தியோக வலைத்தளத்திற்கு இங்குஅழுத்துக

பெரிய அளவுள்ள பைல்களை வேகமான Copy செய்ய..

பெரிய அளவுள்ள சில பைல்களையோ அல்லது கோப்புகளையோ கொப்பி செய்திடுகையில் சில வேளைகளில் விண்டோஸ் இயங்க மறுக்கும்.
இதுவே அதிகளவுள்ள பைல்களையுடைய கோப்புகளை கொப்பி செய்திடுகையில் இப்பிரச்சினை ஏற்படும் போது எந்தந்த பைல்கள் கொப்பியாகியுள்ளது, எந்த பைல் கொப்பி ஆகவில்லை என்று கண்டுபிடிப்பது மிகச்சிரமமாகும். இத்தகைய பிரச்சினைகளின் போது என்ன செய்வது என்று திண்டாடுவோம்

இதனை தவிர்த்து மிக வேகமாகவும் விரைவாகவும் பெரிய அளவுள்ள கோப்புகளை காப்பி செய்ய உதவும் ஒரு மென்பொருளே Tera Copy எனும் ஒரு இலவச மென்பொருளாகும்.

இந்த மென்பொருளை கணணியில் நிறுவியபின் நீங்கள் கொப்பி செய்யும் போதல்லாம் தானாகவே இயங்கி வேகமாக கொப்பி செய்யும்.
பெரிய அளவுள்ள பைல்களை  கொப்பி செய்யும் போது அதனை Pause, Resume செய்யும் வசதியும் இதில் உண்டு.
அதுமாத்திரமின்றி பெரிய அளவுள்ள கோப்புகளை காப்பி செய்யும் போது ஏதாவது பைல் ஒன்றை கொப்பி செய்வதில் பிரச்சினை ஏற்படுமாயின் அந்த பைலை விட்டுவிட்டு ஏனைய பைல்களை காப்பி செய்யும் அனைத்து பைல்களையும் கொப்பி செய்து முடித்ததும் பிழையான பைலின் விபரத்தை காட்டும் அதனை சரி செய்து விரைவாக அதனையும் காப்பி செய்யலாம்...

Tera Copy மென்பொருளை தரவிறக்க......
மேலும் விபரமறிய Tera copyயின் உத்தியோக வலைத்தளச்சுட்டிக்கு இங்கு அழுத்துக.