இந்த பயன்பாடானது 1 நம்முடைய கணினியை ஒரு கம்பியில்லா இணைப்பு மையமாக (WiFi hotspot) செயல்பட அனுமதிக்கின்றதுநம்மிடம் புதிய வகை டேப்லெட் கணினி,ஸ்மார்ட் போன், வொய் ஃபி இணைப்பில் இயங்கிடும் camera, blue ray player என்பன போன்ற சாதனங்கள் உள்ளன ஆனால் நம்மிடம் கம்பியுடன் இணைப்புகொண்ட இணைய இணைப்பு மட்டுமே உள்ளது எனில் இவைகளை இணைப்பதற்கு ஒரு நிரந்தரமான வழிசெலுத்தியோ(permanent Router) அல்லது வேறு ஏதேனுமொரு சாதனமோ தேவையில்லை நம்முடைய கணினியானது ஒருwireless adapter ஆல் முன்கூட்டியே கட்டமைக்கபட்டதாக இருந்தால் போதுமானது அதனுடன் கூடுதலாக இலவசமாக கிடைக்ககூடிய MyRouter.என்ற பயன்பாட்டுமென் பொருள் மட்டும் போதுமானதாகும்
2 நம்முடைய WiFi network ஐ நம்முடைய சொந்த பெயருடன்கூடியSSID வலைஇணைப்பாகவும் கடவுச்சொற்களுடனும் செயல்படுமாறும் மறுவெளியீடு செய்கின்றது
3 வலைஇணைப்பு மையத்தில் (network hotspot) யாராவது புதியவர்கள் இணைப்பு பெற்று செயல்பட்டால் அவர்கள் யார்என அறிந்துகொள்ள உதவுகின்றது
4 மற்ற கணினிகளில் மட்டும்நம்முடைய இணைய இணைப்பை தொலைபேசி அல்லது வேறு சாதனம் எதுவமில்லாமலேயே பகிர்ந்து கொள்ள அனுமதிக்கின்றது
5 வளாக பினையம் (LAN)அல்லது உள்ளூர் இணைப்பு(Local network) போன்று இணைப்பு வாயில்களை(port) மூடவும் திறக்கவும் அனுமதிக்கின்றது
இதனை செயற்படுத்திட
1விண்டோ7 அல்லது விண்டோ8 R இயக்கமுறைமை
2விண்டோ எக்ஸ்பி,விண்டோ விஸ்டா எனில் தற்காலிகமாகமட்டும்
3இந்த இயக்கமுறைமையில் Adminஆக உள்நுழைவதற்கான அனுமதி
4 கம்பியில்லா வலைபின்னலுக்கான அட்டை (Wireless network card)
5 மைக்ரோசாப்ட் .நெட் ப்ரேம்வொர்க் 4.0 ஆகியவை மட்டும் தேவையானவையாகும்
இந்த MyRouter.என்ற பயன்பாட்டுமென் பொருளை http://myroutervwr.info/download.php
என்ற இணையபக்கத்திலிருந்து பதிவிறக்கம் செய்து நம்முடைய கணினியில் நிறுவிக்கொள்க பின்னர் startஎன்ற பட்டி மூலம் இதனை செயற்படுத்துக
உடன் விரியும் MyRouter(Virtual WiFi Router) என்ற உரையாடல் பெட்டியில் wifi Name என்பதில் skRouter என்று நாம்விரும்பும் பெயரையும் Password என்பதில் ****என்றவாறு எளிதில் நினைவில் கொள்ளுமாறான சொற்களையும் net work card என்பதில்Local Area Connection என்றும் Max Peers என்பதில் நாம் விரும்பும் எண்ணிக்கையையும் படத்தில் உள்ளவாறு அமைத்துகொண்டு connect என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
பிறகு இங்கு நாம் கம்பியில்லா இணைப்பை பெற இருப்பதால் startஎன்ற பட்டியில்WiFi setup என்ற திரையை தோன்றசெய்து அதில் Router பெயராக நாம் ஏற்கனவே வழங்கிய Router _ skRouterஎன உள்ளீடு செய்துகொள்க
அவ்வளவுதான் இனி நம்முடைய கணினியில் மேலே கூறிய அனைத்து பயன்களையும் பெறமுடியும்



